கண்டி சம்பவத்திற்கான காரணம் குறித்து
ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு !
முஸ்லிம் மக்களை கடுமையாக எச்சரிக்கின்றார்!!

கண்டி - திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கண்டியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தை எம்மால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்களம் முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து இவ்வாறான அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் விளைவு விபரீதமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
இது சிங்கள பௌத்த நாடு, இந்த நாட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களுக்கு நாம் சொல்லித்தருகின்றோம்.
கண்டியில் டிப்பர் வாகனத்தில் சென்ற 42 வயதுடைய குமார சிங்க என்ற இளைஞன் சிலரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சிறந்த சமூக சேவையாளர். ஒரு குடும்பஸ்தர். இவரை நம்பி மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர் முஸ்லிம், சிங்களம் என்று பேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்து வந்துள்ளார்.
இவர் வாகனத்தில் சென்றபோது முச்சக்கர வண்டியில் வந்தவர்களுக்கு இடம் கொடுக்காத காரணத்தினால் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்று அந்த இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
இதனால் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே கண்டியில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாடும் நாட்டு அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கமும் மக்களும் தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும், தயவு செய்து வன்முறைகளில் இறங்க வேண்டாம் என்றும் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்
பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில் மக்களின் தகவல் அறியும் சட்டமூலம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற வகையில் இலங்கையும் தற்போது காணப்படுவதாக சர்வதேச மட்டத்தில் பொய்யான கருத்துக்கள் பரவலாக வெளியிடப்பட்டு வருகின்றது.
 ஆனால் உண்மை நிலையினை பற்றி எவரும் குறிப்பிடுவது கிடையாது . சிலர் பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது அரசியல் செல்வாக்கினை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக தேசிய அரசாங்கத்தின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் . இனவாத கலவரத்தினை இனவாத கொள்கையின் அடிப்படையிலேயே தீர்வினை காணமுயற்சிகளை மேற்கொள்ள முயல்வதை அம்பாறை விவகாரததில் அறிய முடிந்துள்ளது.
தெல்தெனிய விவகாரம் கண்டிக்கத்தக்கதாகவே காணப்படுகின்றது . பாதிக்கப்பட்ட சிங்கள இனவத்தவரின் மீது எவ்வித தவறுகளும் கிடையாது . என்ற விடயம் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவுள்ளது.

இனக்கலவரம் தீவிரமடைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே முக்கிய காரணமாக காணப்படுகின்றது. தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை பொலிஸார் கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதை ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்த பின்னரே அவரது தரப்பினர் விரக்தியுற்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பொது மக்களின் தகவல் அறியும் சட்டத்தினை அரச தரப்பு அதிகாரிகள் பின்பற்றாமையின் காரணமாகவே மக்கள் குறித்த விடயம் தொடர்பில் எவ்வித தகவலும் அறியாமல் கலவரத்தினை மேற்கொண்டுள்ளமை சாதாரணமாகவே காணப்படுகின்றது.
தற்போது தெல்தெனிய கலவரத்திற்கு மூலகாரணம் பொதுபல சேனா அமைப்பினரே என்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகவலைதளங்களில் பொய்யான கருத்துக்களை பரப்பி மக்களை திசைதிருப்பவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள பொலிஸ் தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 தேசிய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம் பெற்றுள்ள கலவரம் தொடர்பில் இதுவரை காலமும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே தொடர்ச்சியாக இது போன்ற இனக்கலவரங்கள் இடம்பெற்று வருகின்றது. நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் அமைச்சர்கள் தமது சுய இலாபத்திற்கு மாத்திரமே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த விவகாரம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறியில்லாவிடின் நாட்டின் எதிர்காலம் சிரியா போன்ற நாடுகளின் நிலைமைக்குத் தள்ளப்படும் என்ற விடயத்தினை தேசிய அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top