இன வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள .நா

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது


இலங்கையில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள .நா அமைப்பு, இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் .நா கோரியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பாக, கொழும்பில் உள்ள .நா பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும், அண்மைய இன வன்முறைச் சம்பவங்கள் குறித்து .நா கவலையடைந்துள்ளது. இந்தச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யுமாறும், மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அதிகாரிகளையும், அனைத்து இலங்கையர்களையும் .நா கோருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top