இராணுவ பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொழுகை
தேரர்கள் பள்ளிவாசலில் பொதுமக்களுடன்
சிநேகபூர்வ கலந்துரையாடலில்

இராணுவத்தினர், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்லிம்கள் நேற்று பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் ஈடுபட்டனர்.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால், குறைந்தது மூவர் உயிரிழந்தனர். அத்துடன் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட முஸ்லிம்களின் பெருமளவு வீடுகள், வர்த்தக நிலையங்கள், தீவைத்து எரிக்கப்பட்டன. தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருந்தனர்.
இதனால், கண்டியிலும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்துக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், நேற்று முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைகளில் ஈடுபட்டனர்.
கண்டியில் வன்முறைகளால் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்களுக்குள் தொழுகை நடத்த முடியாததால், திறந்த வெளியில் தொழுகைகள் நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, எந்தச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிவாசல்களில், வெள்ளிக்கிழமை தொழுகைகள் இடம்பெற்ற போது, பாதுகாப்புக்காகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், பௌத்த பிக்குகளும் அவ்விடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.



இரத்மலான பகுதியில் ஜும்ஆ தொழுகையை அடுத்து பிரதேச தேரர்கள் பள்ளிவாசலில் பொதுமக்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படம்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top