கண்டியில் முப்படையினரும் குவிப்பு
– இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல்
ருக்மன் டயஸ் நியமனம்
கண்டி
மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில்
அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இராணுவப் படையினருக்கும்
பொலிஸாருக்கும் இடையிலான
ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக
மேஜர் ஜெனரல்
ருக்மன் டயஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி
மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள படையினர்
மற்றும் பொலிஸாருக்கு
இடையில் ஒருங்கிணைப்புப்
பணியை மேற்கொள்வதற்காக
இந்த நியமனம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
கண்டி மாவட்டத்திலர்
850 இராணுவத்தினரும், 128 கடற்படையினரும் பாதுகாப்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க
தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
மேலும்,
250 இராணுவத்தினர் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேவைப்பட்டால்
மேலதிக படையினரை
ஏனைய பகுதிகளில்
இருந்து அழைக்க
முடியும் என்றும்
இராணுவப் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
கண்டி
மாவட்டத்தில் தற்போது இராணுவம், பொலிஸ், சிறப்பு அதிரடிப்படையுடன்,
கடற்படை மற்றும்
விமானப்படையின் அணிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


0 comments:
Post a Comment