ஹிரோஷிமாவில்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன
ஜப்பானுக்குப்
பயணம் மேற்கொண்டுள்ள
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன ஹிரோஷிமாவுக்குச்
சென்று அஞ்சலி
செலுத்தியுள்ளார்.
இரண்டாம்
உலகப் போரின்
போது, ஜப்பானில்
அணுகுண்டு வீசப்பட்ட
நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமாவுக்கு ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன நேற்றுப்
பயணம் மேற்கொண்டார்.
அங்கு,
அணுகுண்டு வீச்சுக்குப்
பலியானவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவர்
மலர் வளையம்
வைத்து அஞ்சலி
செலுத்தினார்.
ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அந்நகரின் நகர பிதாவினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹிரோசிமா நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அங்குள்ள நூதனசாலையையும் பார்வையிட்டார்.
அப்பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் கட்டிடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
ஹிரோஷிமா
நகர முதல்வரும்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவுடன்
இந்த நிகழ்வில்
பங்கேற்றார்.




0 comments:
Post a Comment