மீள அறிவிக்கும் வரை கண்டியில் மீண்டும் ஊரடங்கு







கண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மீள அறிவிக்கப்படும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமைய, கண்டி மாவட்டத்தில், கையடக்க தொலைபேசி வழியான இணைய சேவையை (3G/4G) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக டயலொக் (Dialog) நிறுவனம் அறிவித்துள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top