கொழும்பு வந்தார் ஐ.நா
உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்
அரசியல்
விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலாளர் ஜெப்ரி
பெல்ட்மன் மூன்று
நாட்கள் பயணமாக,
நேற்று மாலை கொழும்பு வந்தடைந்துள்ளார் என்று, கொழும்பில்
உள்ள ஐ.நா பணியகம்
தெரிவித்துள்ளது.
இவர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க,
மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், அரசியல்
கட்சிகள் மற்றும்
சிவில் அமைப்புகளையும்
சந்திக்கவுள்ளார்.
அத்துடன்,
முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் இடம்பெற்ற கண்டி
மாவட்டத்துக்கும் ஐ.நாவின் உதவிச் செயலாளர் ஜெப்ரி
பெல்ட்மன் பயணம்
மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடக் கூடும்
என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment