வங்காளதேசம்
நாட்டு விமானம்
காத்மாண்டுவில்
விழுந்த விபத்தில் பலர் பலி
வங்காளதேசம் அரசுக்கு சொந்தமான விமானம் 67 பயணிகளுடன்
காத்மாண்டு விமான நிலையத்தில் விழுந்து தீபிடித்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன்
நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு வந்த யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் (உள்ளூர்
நேரப்படி இன்று பிற்பகல் 2.20 மணியளவில்) காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச
விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.
வானத்தில் இருந்து கீழே இறங்கி, ஓடுபாதை எல்லைக்குள் நுழைந்தபோது கட்டுப்பாட்டை
இழந்த விமானம், ஓடுபாதையில்
இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ
பிடித்து எரிந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய மீட்புப் படையினரும்,
தீயணைப்பு வீரர்களும்
சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீப்பற்றி எரியும் விமானத்துக்குள் கருகிய நிலையில்
உயிருக்கு போராடிய சிலரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
மீட்கப்பட்ட சுமார் 20 பேரில் 8 பேர் உயிரிழந்ததாகவும்,
விமானத்தின் ஒரு பகுதியை
வெட்டி எடுத்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று
வருவதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.





0 comments:
Post a Comment