வாழைச்சேனை அக்பர் பள்ளிவாயல்
அருகில் நடந்த தாக்குதல்

வாழைச்சேனை தபாலதிபர் வீதியில் இயங்கிவரும் அல் ஹிக்மா இஸ்லாமிய நிலையத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது ஒரு குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் ஐவர் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இஸ்லாமிய நிலையத்தில் சிறுவர்களுக்கான குர்ஆன் மதரசா, ஆண்கள், பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவுகள், ஐந்து நேர தொழுகைக்கள் போன்றவை அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புக்களோடு மிகவும் அமைதியாக இடம்பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இஸ்லாமிய நிலையத்தை மூடுமாறும் அவ்விடத்தில் எதுவித சமய வழிபாடுகளில்லும் ஈடுபட வேண்டாம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top