பிரதமரின்
இப்தார் நிகழ்வில்
பிரதமர்
மீது தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்திய
முஸ்லிம்
காங்கிரஸ் எம்.பிக்கள்
புனித ரமழான் நோன்பு தின, இப்தார் நிகழ்வானது, நேற்றைய தினம் (05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்,
அலரி மாளிகையில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை,சம்மாந்துறை
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற
உறுப்பினரான எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் பிரதமர் அமர்ந்திருந்த இட்த்தில் உள்ள
மேசையின் அருகில் அமர்ந்து பிரதமர் மீது தங்கள் அபிமானத்தை
வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, பொத்துவில் தேர்தல் தொகுதி மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் பைஸல் காசீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமர்ந்திருந்த இட்த்தில் உள்ள மேசையின் அருகில் அமர்ந்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment