18.06.2019 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



01. ஊழியர் சேமலாப நிதி அங்கத்தவர்களுக்கு தமது நன்மைகளை இலகுவாகவும் துரிதமாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் 1958 ஆம் ஆண்டு இல 15 கீழான ஊழியர்  சேமலாப நிதி சட்டத்தின் கீழ் கட்டளை பிறப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 9 ஆவது விடயம்)

தனியார் மற்றும் அரசாங்க சார்பு பிரிவில் ஊழியர்களுக்காக ஓய்வூதிய நன்மைகளை வழங்கும் நோக்கில் 1958 ஆம் ஆண்டு இல 15 கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சேவை கொள்வோரினால் ஊழியர் ஒருவரை சேவைக்கு இணைத்துக் கொண்ட பின்னர் அந்த ஊழியரின் தகவல்கள் தொழில் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு சேவை கொள்வோர் கடமைப்பட்டுள்ளதுடன் இவ்வாறான தகவல்களை வழங்குவது என்பது தொடர்பில் மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் எத்தகைய காலப்பகுதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட காலம் முதல் இவரிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட தகவல்களை உரிய காலத்திற்குள் வேலைக்கொள்வோரினால் தகவல்கள் தொழில் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு வேலைக் கொள்வோரை குறிப்பிடுவதற்கும் சேவைக் கொள்வோரினால் இவ்வாறு பெற்றுக் கொடுப்பதிலிருந்து தவறும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட சேவையாளருக்கு இந்த தகவல்களை நேரடியாக அறிவிக்கக் கூடிய வகையில் 1958 ஆம் ஆண்டு இல 15 கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கட்டளைகளை தயாரிப்பதற்காக அமைச்சரவையில் இல்லாத தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. அரச நிறுவனத்திற்கு உட்பட்ட பயனுள்ள வகையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் துரித பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது விடயம்)

நாட்டிலுள்ள வனங்களை உள்ளடக்கிய மொத்த காணியின் அளவு 29.7 சதவீதமாவதுடன் அதனை 2030 ஆம் ஆண்டளவில் 32 சதவீதமாக விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மேலும் 148,000 ஹெக்டர் காணி அளவு வன நிலப்பகுதியாக விரிவுபடுத்துவதற்கு வன பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக வன பாதுகாப்பு திணைக்களம் கொண்டுள்ள காணியின் அளவு மாத்திரம் போதுமானதல்ல என்பதினால் ஏனைய அரச மற்றும் தனியார் காணிகளை இந்த வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு கொண்டுள்ள காணிகளில் இது வரையில் பொருளாதார பயிர் உற்பத்திக்கு அப்பால் வன பகுதியை 65 சதவீதமாக கொண்டுள்ள அனைத்து காணி மற்றும் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட காணிகளில் தற்பொழுது வன பாதுகாப்பு திணைக்களத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கலப்பு வன வளர்ப்பு வேலைத்திட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்கு அமைவாக அடையாளங் காணப்பட்டுள்ள காணி வன பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வன காப்பீட்டை அதிகரிப்பதற்கான துரிதமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுவீகரிப்பதற்கென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்;கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. வன அழிப்பை தடுக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி வாள் இறக்குமதியை தடை செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 14ஆவது விடயம்)

இது வரையில் நாட்டில் வனப்பகுதி மொத்தக் காணியில் 29.7 சதவீதமாவதுடன் 2030ஆம் ஆண்டளவில் இத்தொகையை 32 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு அமைவான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனுமதியற்ற ரீதியில் மரங்களை அழித்தல் காடுகளை அழிவதற்கு முக்கிய விடயமாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இந்த வன அழிப்புக்காக இலகுவாக கொண்டு செல்லக்கூடிய இயந்திர சங்கிலி வாள் பெருமளவில் பயன்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதுவரையில் 82,000க்கும் மேற்பட்ட இயந்திர சங்கிலி வாள்கள்; பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதுடன் வன அழிப்பை தடுப்பதற்கும் வனத்தின் அளவை அதிகரிக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி வாள் இறக்குமதியை தடை செய்வதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் ஒன்றின் கீழான ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தேவையான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 2014ஆம் ஆண்டு இல 38 கீழான காணி (உடைமை பரிமாற்றலை வரையறுத்தல்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 17 ஆவது விடயம்)

50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு பங்கு உரிமையாளர்கள் கொண்டுள்ள கொழும்பு பங்கு பரிமாறல் பட்டியலிடப்பட்ட நிறுவனத்திற்காக நாட்டில் காணியை கொள்வனவு செய்யும் 2014ஆம் ஆண்டு இல 38 கீழான காணி ( உரிமை பரிமாற்றலை வரையறுத்தல்) சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த தடை 2018 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டதன் மூலம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த திருத்தத்தின் மூலம் 2018.04.01 திகதிக்கு பின்னர் இடம்பெற்ற காணி பரிவர்த்தனைக்கு மானியம் வழங்கப்பட்ட போதிலும் இந்த திகதிக்கு முன்னதாக கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மானியம் வழங்கப்படவில்லை. இந்த குறைபாட்டை நீக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு இல 38 கீழான சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை மேலே கூறப்பட்ட காணி பரிவர்த்தனை தொடர்பில் நீக்குவதற்காக திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்கென நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் நிதியுதவி வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 18ஆவது விடயம்)

நாட்டில் அரச துறையில் நிறைவேற்று தர அதிகாரிகளுக்காக ஜப்பானில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டபின் படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக 2010 ஆம் ஆண்டில் ஜப்பான் அரசாங்கத்தினால் மனிதவள அபிவிருத்தி புலமைப் பரிசிலுக்கான ஜப்பான் நிதியுதவி வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் முதலாவது கட்டமைப்பு 2010 - 2013 வருடத்திற்காகவும் 2 ஆவது பணி கட்டமைப்பு 2014 - 2017 வருடங்களுக்காகவும் 3 ஆவது பணி கட்டமைப்பு 2018 - 2021 ஆம் ஆண்டுகளுக்காகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்தோடு இந்த 3ஆவது பணி கட்டமைப்பில் 2ஆவது குழு புலமைப்பரிசில் பயனாளிகள் இதுவரையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவிற்கு தேவையான வசதிகளை செய்தல் அதற்கு தேவையான 263 ஜப்பானிய யென்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நடைமுறையில் பொறுப்பு கூறும் முகாமைத்துவம் (நிகழ்ச்சி நிரலில் 19 ஆவது விடயம்)

அரச கடனை திருப்பி செலுத்துவதற்கு தேவையான நிதியை மிகவும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரச கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் 2018 ஆம் ஆண்டில் இல 8 இன் கீழான நடைமுறை பொறுப்பு முகாமைத்துவ சட்டம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்க கடன் முதிர்ச்சி கவனத்தில் கொண்டு 480 மில்லியன் ரூபா அதிகரிக்கப்படாத நிதி அளவு 2018 இல 2 இன் கீழான முதிர்ச்சியடைந்த கட்டமைப்பு பொறுப்பு கூறல் முகாமைத்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்காக தேசிய அல்லது வெளிநாட்டில் திரட்டுவதற்கு இலங்கை மத்திய வங்கி நிதி சபையினால் சிபாரிசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2018 இல 8 இன் கீழான நடைமுறையில் பொறுப்பு கூறும் முகாமைத்துவ சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக 480 மில்லியனுக்கும் மேற்படாத தொகையை திரட்டுவதற்காக பாராளுமன்றத்தில்; பிரேரணை சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களில் முகாமைத்துவத்தை கண்காணிப்பதற்காக பணியாளர் செயலாக்க பிரிவை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 31 ஆவது விடயம்)

பெருந்தோட்ட துறையின் பேண்தகைமையை முன்னெடுப்பதற்காக தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிபாரிசுகளை சமர்பிப்பதற்காக 3 வருட கால எல்லை பகுதிக்குள் செயலாக்க பிரிவை அமைப்பது முக்கியமானது என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை செயற்பாட்டு நிலைமையை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட இந்த நடைமுறை 3 வருட காலத்திற்குள் இத்துறையில் சிறப்புமிக்க 10 பேரினால் உருவாக்கப்பட்ட பிரிவை அமைப்பதற்கும் அதற்காக தேவையான ஏனைய வசதிகளை செய்து கொடுப்பதற்குமாக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08.தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கான வணிக வளங்களை வழங்கும் கட்டமைப்பொன்றை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)

நாட்டின் தெங்கு உற்பத்தி மொத்த உற்பத்திக்காக 0.6 வீத பங்களிப்பை வழங்குவதுடன் ஏற்றுமதி வருமானத்திற்காக 5.2வீதத்தை பங்களிப்பு செய்கிறது. இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதிக்கு முன்னர் வருடத்தின் முதல் காலாண்டுக்கு அமைவாக உயர் ஏற்றுமதி வருமானத்தை தெங்கு தொழிற்துறை ஊடாக பெற்றுக் கொள்வதற்கு முடிந்துள்ளது. தெங்கு தொழிற்துறையுடன் சம்பந்தப்பட்ட தயாரிப்பு ஏற்றுமதி மற்றும் மொத்த தெங்கு துறையுடன் சம்பந்தப்பட்ட செயற்பாட்டிற்காக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் தொழிலாளர்கள் உற்பத்தியாளர்கள் தெங்கு தொழிற்துறைக்கான சேவையை வழங்குனர் பல்வேறு அரச நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஏனைய பல்வேறு தரப்பினரினால் வழங்கப்படும் தாமதமற்ற சேவைகள் மற்றும் தரமானதை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் சேவைகள் செயல் திறன் மிக்கதாகவும்; திருத்தமாகவும் தாமதமின்றி நிறைவேற்றுதல் அதே போன்று சேவை பயனாளிகளுக்கு இணையதளத்தினூடாக மிகவும் இலகுவாக தேவையான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதி கிட்டும். இதற்கமைவாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்காக வணிக திட்டமிடல் கட்டமைப்பொன்று 40 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் அமைப்பதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அரச பெறுகை கட்டமைப்பில் இலத்திரனியல் அரச பெறுகை (e-GP) அறிமுகப்படுத்துவதற்காக தீர்வு பெறுகையை தெரிவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 45 ஆவது விடயம்)

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி ஆய்வு (UCSC) உள்ளிட்ட விரிவான ஒழுங்கமைப்பைக் கொண்ட தரப்பினரின் பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்பட்ட இலங்கை அரச பெறுகை கட்டமைப்பில் இலத்திரனியல் அரச பெறுகை (e-GP)  கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட செயற்பாட்டு குழுவின் சிபாரிசை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இந்த கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் தீர்வுக்கான நடவடிக்கையை இதுவரையில் இந்த திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பங்களிப்பு செய்த மற்றும் அரச அபிவிருத்திற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வை வழங்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவான நுண்ணறிவுத்திறன் நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு மற்றும் அந்த நிறுவனத்துடன் உடன்பாடொன்றை எட்டுவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பொலன்னறுவை மாவட்டத்தில் பல்லின மற்றும் மும்மொழி கல்வியுடன் கூடிய தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பு மற்றும் விஞ்ஞான கூட வசதியுடன் கூடிய கட்டிடத் தொகுதியை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 50ஆவது விடயம்)

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் பல்லின மற்றும் மும்மொழியுடன் கூடிய தேசிய பாடசாலையில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான வகுப்புகளை நடத்துதல் மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக தேவையான வசதிகளுடன் கூடிய இந்த பாடசாலையின் முதலாவது கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு இந்த பாடசாலையில் தரம் 12 மற்றும் 13 இற்கான வகுப்பறைகள் மற்றும் விஞ்ஞான வசதிகளுடன் கூடிய மற்றுமொரு கட்டிடத் தொகுதி அமைக்கப்பட வேண்டும். இந்த கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கு 245.9 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு கூறல்) சட்டத்திற்கு அமைவாக சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கை 2018 (நிகழ்ச்சி நிரலில் 52ஆவது விடயம்)

2003 ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டத்தின் 13ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வருடாந்த அறிக்கை (தேவையான வரவு செலவு திட்ட நிலைமை தொடர்பான அறிக்கை) நிதியமைச்சரினால் பாராளுமன்றம் மற்றும் பொது மக்களுக்கு சம்பந்தப்பட்ட நிதி ஆண்டின் இறுதிக்கு பின்னர் 5 மாதம் செல்வதற்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும். இதற்கமைவாக நாட்டின் அனைத்து மற்றும் அரச நிதி கொள்கை விளக்க குறிப்புக்கள் மொத்த வரவு செலவு திட்ட நிலைமை அரச துறையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் மறுசீரமைப்பு நிதி வெளியீடு போன்ற 4 பிரிவுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 2018 நிதி ஆண்டில் அரச நிதி செயற்பாடு தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் உள்ளடக்கிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 55ஆவது விடயம்)

ஏதேனும் உரிய செயல் திறனை பூர்த்தி செய்துள்ள இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்வதற்கு ஜப்பானின் நீதித்துறை அமைச்சு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சுகாதார தொழிலாளர் மற்றும் சேமநல அமைச்சு தேசிய கொள்கையை பிரிதிநிதித்துவப்படுத்தல் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கிடையில் தெளிவான பயிற்சி சேவையாளர்கள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக தொலைத் தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்கத்தினால் அழுத்தத்திற்குள்ளான சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட நிவாரணப் பொதியை மேலும் விரிவுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)

சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா தொழிற்துறையின் எதிர்காலம் தொடர்பில் எதிர்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு இந்த துறையை மேம்படுத்துவதற்காக நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக அந்த சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலா தொழிற்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளுக்கான நிவாரணத்தை வழங்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு இந்த துறைக்காக முன்னர் வழங்கப்பட்ட நிவாரணத்தை தொடர்ந்தும் விரிவுபடுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கமைவாக சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் நபர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கடன் திட்டத்திற்காக 2020 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நிவாரண காலமொன்றை வழங்குதல் மற்றும் அதற்கான கடன் பாதுகாப்பு நிதியில் உள்ளடக்கப்படுவதை விரிவுபடுத்தல் பஸ் உரிமையாளர்களுக்காக 2019ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் திகதி வரையில் 2மாதத்திற்கு கடன்களுக்காக நிவாரண கால அவகாசம் வழங்குதல் இசைக்குழு சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் நபர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட குழு கடன் திட்ட முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சுறு;றுலா தொழிற்துறையை மற்றும் தொடர்புபட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு சிறிய அளவிலான முறைப்படி அமையாத பிரிவுகளின் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான நிவாரண உதவியை வழங்குவதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 'சஞ்சாரக பொட்டோ' என்ற நிவாரண கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் முலானவற்றுக்கான நிவாரணத்தை முன்னெடுப்பதற்கான முறைக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top