ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியதற்காக
ஜனாதிபதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில்
இரு மனுக்கள் தாக்கல்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு நேற்று (20) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஆறுவருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தினால் இவ்விரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களில் ஜனாதிபதியின் சார்ப்பாக, சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top