கல்முனை சாத்வீக சத்தியாக்கிரகப்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து
முஸ்லிம் தரப்பிலிருந்து
குவியும் ஆதரவுகள்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தி தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என அரசைக் கோரும் சாத்வீக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து முஸ்லிம் தரப்பிலிருந்து ஆதரவுகள் குவிந்து
வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இனத்துவரீதியிலும், நிலத் தொடர்பற்ற ரீதியிலும்
உருவாக்கப்பட்ட எத்தனிக்கும் இப் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி கல்முனை
மக்களால் மேற்கொள்ளப்படும் சாத்வீக சத்தியாக்கிரகத்திற்கு பல பிரதேசங்களிலிருந்தும் ஆதரவு
பெருகி வருகின்றது.
நிலத் தொடர்பில்லாத தமிழ் பகுதிகளை இணைத்து தனியாக பிரதேச செயலகம் கேட்பதில் நியாயமில்லை தேரர்கள் தலையிட்டிருப்பதன் மூலம் கல்முனையில் தேவையற்ற முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது என சமாதான விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
கல்முனையில் இரண்டாவது நாளாக தொடரும் சாத்வீக சத்தியாகிரகப் போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் பல்வேறு
இடங்களிலிருந்தும் ஆதரவு தெரிவித்து வருகை தந்த வண்ணமுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்துவதற்கான தமிழ், சிங்கள தரப்பு அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து வரும் நிலையில்,
முஸ்லிம் மக்கள் மத்தியில் அதற்கு எதிராக
முஸ்லிம் மக்கள் தரப்பில் மேற்கொள்ளப்படும் சாத்வீக சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
முன்னாள்
இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ்,பாராளுமன்ற
உறுப்பினர் ஏ.எல் நஸீர்,முன்னாள் மாகாண
சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் மற்றும் இறக்காமம்,பொத்துவில், அட்டாளைச்சேனை
பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அதன் உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ரஹ்மத் மன்சூர் என பலர் இன்றைய நாள் (21) சாத்வீக சத்தியாகிரக போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment