உண்ணாவிரதம் இருக்கும் தேரர் நஞ்சருந்தி
உயிர் துறக்கப்போவதாக எச்சரிக்கை!

எதிர் வரும் செவ்வாய்க் கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்கா விட்டால் நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட ரன்முத்துகல சங்கரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்து பிரதமரின் தகவலை கொண்டு சென்ற அமைச்சர் குழுவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோகணேசன், தயா கமகே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கோடிஸ்வரன் ஆகியோருக்கே மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பிரதமரிடத்தில் இருந்து வந்த விசேட செய்தியினை குறித்த குழுவினர் அங்கு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருபவர்களிடம் வாசித்து காட்டினர்.

அதன்பின்னர் அங்கு மக்களுடன் கலந்துரையாடிய மேற்குறித்த அமைச்சர் குழு பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்ட செய்தியையும் தெரிவித்தனர்.

இதன்போது கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள், தாக்குதல் முயற்சியையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்குறித்த அமைச்சர்களின் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை பொதுமக்களின் இடத்தில் இருந்து வெளியேற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், தமது போராட்டத்துக்கு உடனடித் தீர்வே வேண்டுமென வலியுறுத்தியுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லாத நிலையில் நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top