உண்ணாவிரதப் போராட்டக்காரர்களின்
உடல்நிலை அபாயக்கட்டமாம்:
வைத்தியர்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்
கல்முனை
வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சர்வத மதத் தலைவர்கள் உண்ணாவிரதப்
போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களின் உடல் நிலை அபாய கட்டத்தை
அடைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்
நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்
இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவிற்கும் முஸ்லிம்
காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலும் அவசர சந்திப்பு இடம்பெற்றது.
கல்முனை
பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நேற்று மாலை
செய்திகள் வெளியாகியிருந்த நிலையும் இதுவரை எந்த உத்தியோகபூர்வமாக எந்தத்
தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில்
உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மருத்துவர்கள் அவர்களின்
உடல்நிலை தொடர்பாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment