1960 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற குத்துச்சண்டையில்
வீரர் முகம்மது
அலி பயன்படுத்திய கையுறைகள் ஏலம்
உலகின்
மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றான, ரோமில் நடைபெற்ற
குத்துச்சண்டைப் போட்டியில் குத்துச்சண்டை வீரர் முகம்மது
அலி பயன்படுத்திய கையுறைகள்
ஏலத்திற்கு வருகின்றன.
விளையாட்டு
உலகில் ’தி கிரேட்’
என்றழைக்கப்படும் குத்துச்சண்டை ஜாம்பவான் முகம்மது அலி,
உலகின் மிகவும் ஆபத்தான
குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டன்
ஆகியோர் மோதிய
போட்டியில் அவர்கள் இருவரும் பயன்படுத்திய கையுறைகள்
எதிர்வரும் பெப்ரவரி
21ஆம் திகதி
ஏலத்தில் வருகின்றன.
1960 ஆம்
ஆண்டு ரோம்
நகரில் நடைபெற்ற
ஒலிம்பிக் குத்துச்சண்டை
போட்டியின் மிகு எடைப் பிரிவில் தங்கப்
பதக்கம் வென்ற
முகம்மது அலி,
அதன் பின்னர், களமிறங்கிய
அனைத்துப் போட்டிகளிலும்
வெற்றி பெற்றார்.
1965ஆம் ஆண்டு
மே மாதம்
25ஆம் திகதி
நடைபெற்ற போட்டியில்
முதல் சுற்றிலேயே
ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முகம்மது
அலி வெளியேற்றினார்.
இப்போட்டி உலக
குத்துச் சண்டை
வரலாற்றில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக
இன்றளவும் திகழ்ந்து
வருகிறது.
இப்போட்டியில்
முகம்மது அலி,
லிஸ்டன் ஆகியோர்
பயன்படுத்திய கையுறைகள் எதிர்வரும் பெப்ரவரி 21ஆம்
திகதி அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் உள்ள விளையாட்டு
பொருள்கள் அருங்காட்சியகத்தில்
ஏலம் விடப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment