பாகிஸ்தான் மஸ்ஜிதுக்குள் தற்கொலை படை தாக்குதல்
20 பேர் சம்பவ இடத்திலேயே பலி 65 பேர் படுகாயம




நேற்று வெள்ளிக்கிழமை பெஷாவர் அருகே ஹயாதாபாத் பகுதியில் உள்ள ஷியா மஸ்ஜிதில் 3 தற்கொலைப் படை தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை என்பதால் ஏராளமானோர் மஸ்ஜிதிக்கு வந்திருந்தனர். பாதுகாப்பு படையினரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் அங்கிருந்த காவலாளியை சுட்டுக் கொன்றதுடன், மஸ்ஜிதுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவன் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துள்ளான். கையெறி குண்டுகளை வீசியும் தாக்கியுள்ளனர். அந்தப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்ததும், மக்கள் அலறியடித்துக் கொண்டு மஸ்ஜிதிலிருந்து வெளியே ஓடி வந்தனர்
இதில், 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக இறந்தனர். 65 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டான்.
இத்தாக்குதல் சம்பவத்துக்கு தெக்ரிக்--தலிபான் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஜனாதிபதி மம்னூன் உசேன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிந்து மாகாணத்தில் ஷியா பிரிவு மஸ்ஜிதில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top