முஸ்லிம் அரசியல்வாதிகளின்
கவனத்திற்கு
அரசியலில் பதவிகளைப் பெறுவதற்கு போராட்டம் நடத்துவது போன்று
சமூகத்திற்கு நிர்வாக
ரீதியில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும்
போராடுதல் வேண்டும்.
எமது
முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று தனக்கு ஒரு அதிகாரத்தைப்
பெற்றுக் கொள்வதற்கு எத்தனிக்கிறார்களே தவிர சமுகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி
சரியாகச் சிந்தித்து நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை.
குறிப்பாக
முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கின்றோம் அவர்களுக்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கும்
பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன
தேர்தலில் குதித்து தமது கட்சிக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள்?
மாகாண சபையில் எத்தனை உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு அந்த
உறுப்பினர்களைக் காட்டி எப்படியான அதிகாரமிக்க அமைச்சரைப் தாம் பெற்றுக் கொள்ளலாம்
எனச் சிந்திக்கின்றார்களே தவிர முஸ்லிம் சமூகத்திற்கான நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள்
பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு முயற்சிப்பதாக இல்லை.
முஸ்லிம்
சமூகம் அரசியல் ரீதியாக மாத்திரமல்லாமல் நிர்வாக ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள். அல்லது நடவடிக்கை
எடுக்கத் தவறிக்கொண்டிருக்கிறார்கள் என்றே
சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இதற்கு
பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளமுடியும்
கடந்த
காலங்களில் உயர் நீதிமன்ற நீதியரசர்களில் முஸ்லிம்
ஒருவரும் நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது முஸ்லிம் நீதியரசர் எவரும் நியமிக்கப்படவில்லை
( கடைசியாக சலீம் மெளசூப் நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்)
நியமனம்
செய்யப்பட்டிருக்கும் மாகாண ஆளுநர்களில் முஸ்லிம்கள் எவருமில்லை.
மாகாணங்களின்
பிரதம செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் முஸ்லிம்கள் எவமே இல்லை.
முஸ்லிம்களின்
முக வெற்றிலை என மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபினல் வர்ணிக்கப்பட்ட கல்முனை நகருக்கு தமிழ்
மொழி பேசும் ஒருவரை பிரதேச செயலாளராகக் கொண்டு வர முடியவில்லை.
நாட்டில்
கடமையாற்றும் மாவட்டச் செயலாளர்களில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படுவதாக இல்லை.
இன
விகிதாசாரப்படி பார்த்தாலும் முஸ்லிம் இனத்தவர்களில் குறைந்தது
2 பேராவது நாட்டில்
எப்பகுதியிலாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது
75 சதவீதம் வாழ்கின்ற சிங்களவர்களுக்கு
19 பேரும் 16 சதவீதம் வாழ்கின்ற தமிழர்களுக்கு 04 பேரும் 9 சதவீதம் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு
02 பேரும் என்ற
அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால்
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எவரும் மாவட்டச் செயலாளர்களாக
நியமிக்கப்படுகின்றார்கள் இல்லை. இதனை
எமது அரசியல்
தலைவர்கள் கணக்கில்
எடுப்பதாகவும் இல்லை. பின்வரும் தகவல்களைப் பார்த்தாவது
எமது முஸ்லிம்
தலைமைகள் நடவடிக்கை
எடுப்பார்களா? குறைந்தது 2 முஸ்லிம்களாவது
மாவட்டச் செயலாளர்களாக
நியமிக்கப்படுவார்களா?.
2015.01.01ஆம் திகதி அரசாங்க நிர்வாக
மற்றும் உள்நாட்டலுவல்கள்
அமைச்சு வெளியிட்டுள்ள
இலங்கை நிர்வாக
சேவையில் விசேட
தரத்தில் மூப்புரிமைப்
பட்டியல் அடிப்படையில்
பின்வரும் முஸ்லிம்கள்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை
இலக்கம் பெயர்
10 எம்.ஐ.எம் றபீக் ( முஸ்லிம் அரசியல்வாதிகளின்
ஆதரவு எதுவுமின்றி அமைச்சின் செயலாளராக நியமனம்)
29 எஸ்.எம்.முஹம்மத்
74 ஏ.அப்துல்
மஜீத் ( முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவு எதுவுமின்றி அமைச்சின் செயலாளராக நியமனம்)
129 எம் ஐ.அமீர்
157 யூ.எல்.ஏ.அஸீஸ்
183 எம்.ஏ.தாஜுதீன்
186 ஏ.மன்சூர்
189 ஏ.எச்.எம்.அன்ஸார்
206 ஆர்.யூ.அப்துல் ஜலீல்
207 ஐ.எம்.ஹனிபா
225 ஏ.சி.எம்.நபீல்
276 எம்.அப்துல் அல்லம்
280 எம்.எச்
முயுனுதீன்
283 எம்.எம்.முஹம்மத்
316 ஏ.எல்.முஹம்மது சலீம்
எமது
முஸ்லிம் தலைமைத்துவங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கொக்கரிக்கின்றனர்.
ஆனால், சமூகத்திற்கு உருப்படியாக எதுவும் செய்யப்படுவதாக இல்லை என கவலை வெளியிடப்படுகின்றது.
தமிழ்
சகோதரர்கள் சார்பில் அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமலேயே எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி
நிர்வாக ரீதியாக சரியாகவும் கச்சிதமாகவும் தமது தேவைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு
வருகின்றார்கள். பிரதம நீதியரசர் தமிழ் சகோதரர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மாகாண ஆளுநர்
ஒருவர் தமிழ் பேசும் சகோதரர் நியமனமாகியிருக்கின்றார். வட மாகாண சபையின் பிரதம செயலாளராக
கடமையாற்றிய ஒருவரை நீக்குமாறு கடந்த அரசாங்க காலத்தில் கோரிய போதும் அது நிறைவேறாத நிலையில் இன்று அவர்களின்
கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது (மூப்புரிமை இலக்கம் 273 ஆ.பதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மொனராகலை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள
ஆளுநர்கள் கூட தமிழ் சகோதரர்கள் விரும்பியது
போன்று படைத் தரப்பினர் அல்லாமல் சிறப்பாக நிர்வாக சேவையில் பதவி வகித்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுமாத்திரமல்லாமல்
4 மாவட்டங்களில் 4 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை
இலக்கம் பெயர் ( மாவட்டம் )
181 என் வேதநாயகன் (முல்லைத்தீவு)
227 பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் (மட்டக்களப்பு)
243 எஸ்.அருமைநாயகம் (யாழ்ப்பாணம்)
247 ஆர்.கீதீஸ்வரன் (கிளிநொச்சி)
இவைகளைக்
கருத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலில் பதவிகளைப் பெறுவதற்கு போராட்டம் நடத்துவது போன்று சமூகத்திற்கு நிர்வாக
ரீதியில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் போராடுதல் வேண்டும்.
0 comments:
Post a Comment