சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக
வளாகத்தில் சுவரொட்டிகள்
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'போலி தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளே' எனக்குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில்
கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையில் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டதைக்
கண்டித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இச்சுவரொட்டிகளை ”யாழ் பல்கலைக்கழக சமூகம் ”வெளியிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
0 comments:
Post a Comment