சிறு பான்மை மக்களின் வாக்குகளே
எமது வெற்றியை தீர்மானித்தது

-    பொத்துவில் கூட்டத்தில் ஹிருணிகா

 பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே மக்களாகிய நீங்கள் வாக்களித்து எங்களைப் போன்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம், மாகாண சபைகள் என்பனவத்திற்கு அனுப்புகின்றீர்கள், ஆனால் உங்கள் மூலம் அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்கள் உங்களையும், உங்கள் பிரச்சினைகளையும் மறந்துவிட்டு ,தங்களின் சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே செயற்படுகின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகளை அடுத்து வரும் தேர்தலில் ஒரங்கட்டுவதற்கான நடவடிக்கையினை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், ஓய்வு பெற்ற பொத்துவில் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளருமான சுபைர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது
எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகவும் அக்கரை கொண்ட ஒரு தலைவர்.வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என்ற ஆசை அவரிடத்தில் இருந்த போதும் துரதஷ்டவசமாக அவரால் எல்லா பிரதேசங்களுக்கும் நேரடியாக வந்து தனது நன்றியனைதெரிவித்து கொள்ள முடியாதுள்ளது. அப்படியான பிரதேசங்களுக்கு அவரின் பிரதிநிதியாக என்னை அனுப்பியுள்ளார். அந்த வகையில் வாக்களித்த மக்களாகிய உங்களுக்கு ஜனாதிபதி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தங்களின் மதத்தினை தங்கு தடையின்றி சுதந்திரமாகபின்பற்றுவதற்கான களத்தினை இப்புதிய அரசாங்கத்தின் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்த பொத்துவில் பிரதேசத்தில் கடற்தொழில், விவசாயம் போன்ற பல்வேறு பட்டபிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை களைவதற்கான நடவடிக்கைகளை கொழும்பிற்கு சென்றவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தற்போதய ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர்களின் கவணத்திற்கு கொண்டுவந்து 100 நாள் வேலைத்திட்டட்தில் உள்ளடக்கி உடனடிதீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நான் கூறும் இந்த வாக்குறுதியினை ஏனைய அரசியல்தலைவர்களின் பொய் வாக்குறுதி போல் கருத வேண்டாம்.நாம் பிரதேச வாதம், மதவாதம் பேசுபவர்கள் அல்ல. எனது தந்தை பிரேமசந்திர சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகுந்த அக்கரை கொண்டவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top