ஐ.நா விசாரணை அறிக்கையை
வெளியிடுவதை தாமதப்படுத்துவது தனது கையில் இல்லை
ஜெனிவாவில்
உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே
இதுபற்றி முடிவெடுக்க வேண்டும்
- ஐ.நா பொதுச்
செயலாளர் பான் கீ மூன்
போர்க்
குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணை
அறிக்கையை வெளியிடுவதை
தாமதப்படுத்துவது தனது கையில் இல்லை என்று
ஐ.நா
பொதுச் செயலாளர்
பான் கீ
மூன் தெரிவித்துள்ளதாக
இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அடுத்த
மாதம் ஆரம்பமாகவுள்ள
ஐ.நா
மனித உரிமைகள்
பேரவையில் இலங்கையில்
உள்நாட்டு போர்
நடைபெற்ற காலங்களில்
இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக
சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை
அறிக்கையைப் பிற்போடுமாறு இலங்கை அரசு கோரி
வருகிறது.
நியூயோர்க்கில்
ஐ.நா
பொதுச் செயலாளர்
பான் கீ
மூனை சந்தித்த
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா விசாரணை
அறிக்கையை பிற்போடும்
தமது அரசின்
விருப்பத்தை வெளியிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக
சர்வதேச ஊடகம்
ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
எனினும்,இலங்கையின் வெளிவிவகார
அமைச்சர் இந்த
விருப்பத்தை வெளியிட்டது தொடர்பாக ஐ.நாவின்
அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் எதுவும் கூறப்படவில்லை.
ஆனால்,
மூடப்பட்ட அறைக்குள்
பான்கீ மூனுடன்
நடத்திய சந்திப்பில்,
அறிக்கையைப் பிற்போடுவதன் அவசியத்தை மங்கள சமரவீர
வலியுறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால்,
இது தனது
விவகாரம் இல்லையெனவும்
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித
உரிமைகள் ஆணையாளரே
இதுபற்றி முடிவெடுக்க
வேண்டும் என்றும்
ஐ.நா
பொதுச்செயலர் தெரிவித்து விட்டதாக தம்மை வெளிக்காட்டிக்
கொள்ள விரும்பாத
இராஜதந்திர வட்டாரங்கள் குறித்த செய்தி நிறுவனத்திடம்
தெரிவித்துள்ளன.
ஐ.நா அறிக்கையைத்
தாமதப்படுத்துவதற்கு, ஐ.நா மற்றும் அமெரிக்காவின்
ஆதரவைத் திரட்டிக்
கொள்வதற்கே , மங்கள சமரவீர தனது அமெரிக்கப்
பயணத்தை, பயன்படுத்தியுள்ளார்
என்று கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment