வரலாறும், சாதனைகளும் மாறக்கூடியவை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா கருத்து

வரலாறும், சாதனைகளும் என்றுமே மாறக்கூடியவை. அவை நிரந்தரமானதல்ல. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமானது கிடையாது. எல்லாமே மாறக்கூடியவை இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் எமோஷனலான 'ஹை-வால்டேஜ்' மேட்ச் நாளை 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு  நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று இந்திய அணியின் தலைவர் தோனி, 'பாகிஸ்தான் அணியுடன் மோதுவதில் இந்தியாவுக்கு எந்த பதற்றமும் இல்லை. இந்திய அணியினருக்கு எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை உண்டு' என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் மேற்கண்டகருத்தைத் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:-
களத்தில் இறங்கும் வீரர்கள் இதை மனதில் வைத்தே விளையாட வேண்டும். உணர்ச்சிப்பெருக்கில் விளையாடுவது தவறான முடிவுகளுக்கு வழிவகுத்து விடும். இந்தியாவுடன் மோதுவது எங்களுக்கு கடினமானதா? அல்லது இலகுவானதா? என்று எனக்கு தெரியாது. அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது எதையும் நினைத்துக் கொண்டு விளையாடாதீர்கள். நாட்டுக்கு வெளியே என்ன நடக்கிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. விளையாட்டில் மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும். கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி எந்த எதிர்ப்புக்கும் தயாராக இருக்க வேண்டும். சூழ்நிலைகளை எதிர்த்து போராட வேண்டும்இவ்வாறு மிஸ்பா  தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது கிடையாது. இந்த முறை வரலாற்றை மாற்றியே தீருவோம் என்று பாகிஸ்தான் அணியினர் சூளுரைத்துள்ளார்கள்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top