சுதந்திர தின வைபவத்தில்  பங்கெடுத்தமை தொடர்பில்
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மீது நடவடிக்கையாம்?


கட்சியின் அனுமதியின்றி இலங்கையின் சுதந்திரதின வைபவத்தில் பங்கெடுத்தமை தொடர்பினில் தமிழரசுக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர்களுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஏற்கனவே வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் ஆகிய இருவரும் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015 இல் இலங்கையின் சுதந்திரத்தினத்தில் கலந்து கொண்ட முதலாவது தலைவராக சம்பந்தன் உள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை மீறி அவர் கலந்து கொண்டமை தொடர்பில் அது பலதரப்பினிடையேயும் கடும் சீற்றமடைய வைத்துள்ளது.

இதன் எதிரொலியாகவே கட்சியின் அனுமதியின்றி இலங்கையின் சுதந்திரத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் தமிழரசுக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

1 comments:

  1. Are you all living in India. If SL is not suitable for you all you can migrate.

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top