கண்டி மாவட்டத்தில்100 நாள் வேலைத்திட்டத்தில்
320 இலட்சம் ரூபாய்
செலவில் குடிநீர் வழங்கும் திட்டம்
-
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி, நீர்
வழங்கல் மற்றும்
வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவருமான ரவூப்
ஹக்கீமின் முயற்சியால்
கண்டி மாவட்டத்தில்
யஹலதன்ன கிராமத்திற்கு
320 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும்
திட்டத்திற்கான முதற்கட்ட வேலைகளை அமைச்சர் ஆரம்பித்து
வைத்தார்.
இதன்
மூலம் கருவலவத்த
நீர் விநியோக
குழாய் கட்டமைப்பினூடாக
நாள்தோறும் 35000 லீற்றர் நீர் விநியோக்கிப்படவுள்ளது. இப்பிரதேசத்தை உள்ளடக்கியதாக
அமைக்கப்படவுள்ள உத்தேச பாரிய நீர் வழங்கல்
திட்டம் செயல்படுத்தப்படும்
வரை, இச்செயல்
திட்டத்தினால் யஹலத்தன்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட
350 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இப்பகுதி வாழ் மக்களின்
நீண்டகால நீர்த்
தேவை இத்திட்டத்தினால்
நிறைவு செய்யப்படும்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment