மட்டக்களப்பு
- பொத்துவில் வரையிலான புகையிரதப் போக்கு வரத்துப்
பாதை
முன்னாள் அமைச்சர்
ஏ.ஆர். மன்சூர்
பொது முகாமையாளரைச் சந்தித்தார்
மட்டக்களப்பு
- பொத்துவில் வரையிலான புகையிரதப் போக்கு வரத்துப்
பாதை அமைப்பது சம்பந்தமாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இன்று 25
ஆம் திகதி புதன்கிழமை காலை இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் பொறியியலாளர்
வி. அமரதுங்கவைச் சந்திதார்.
மட்டக்களப்பு
- பொத்துவில் வரையிலான புகையிரதப் போக்கு வரத்துப்
பாதை அமைக்கும் இத்திட்டத்தை எவ்வளவு துரிதமாக ஆரம்பிக்கலாம் என்பது
குறித்து முன்னாள் அமைச்சர் பொதுமுகாமையாளருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த
நற்பணிக்கு பல நாடுகள் உதவி செய்ய இருப்பதாகவும் இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
மன்சூர் பொதுமுகாமையாளரிடம் தெரிவிவித்தார்.
இங்கு
2015 - 2020 முதலீட்டு ஆலோசணைகளில் மட்டக்களப்பு
பொத்துவில் புகையிரதப் பாதைக் கட்டுமானம் (101 KM) அடங்கியுள்ளது என்றும் சுட்டிக்
காட்டப்பட்டது.
மட்டக்களப்பு
- பொத்துவில் வரையிலான புகையிரதப் போக்கு வரத்துப்
பாதை அமைப்பது சம்பந்தமான முக்கிய சந்திப்பு
ஒன்று விரைவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கின்றது. அச்சந்தர்ப்பத்தில் புகையிரதத்
திணைக்களத்தின் பொது முகாமையாளர் பொறியியலாளர் வி. அமரதுங்க பூரண ஒத்துழைப்பு .ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மன்சூர் இச்சந்திப்பின்போது கேட்டு கொண்டார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்கள் கரையோரத்தில் வாழும் தமிழ். முஸ்லிம், சிங்கள அனைத்து
மக்களுடைய நன்மைக்காக மட்டக்களப்பு – பொத்துவில்
புகையிரதக் கட்டுமானம் பணியை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி தருவேன் என்று மக்களுக்கு
வாக்குறுதி அளித்திருப்பது நாடறிந்த உன்மையாகும்.
மட்டக்களப்பு வரையிலுள்ள
ரயில் பாதையானது
பொத்துவில் வரை விஸ்த்தரிக்கப்படல் வேண்டும். கிழக்கில்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கரையோர மக்கள்
பல வழிகளிலும்
நன்மையடைய வேண்டும் இதற்கு
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான
ரயில் சேவைக்குரிய
பாதை உருவாக்கப்படல்
வேண்டும் என்ற
தூரநோக்கு சிந்தனையுடன்
கடந்த 1992 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய
கட்சியின் ஆட்சி
காலத்தில் முன்னாள்
வர்த்தக வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்
முன்னாள் ஜனாதிபதி
பிரேமதாசவின் உதவியுடன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
மறைந்த
முன்னாள் ஜனாதிபதி
ஆர்.பிரேமதாசவின்
அனுமதிக்கு இணங்க ஈரான் நாட்டிற்குச் சென்று
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான
ரயில் பாதை
அமைக்கும் விடயமாக
உரிய தரப்புக்களுடன்
பேச்சுவார்த்தைகளை முன்னாள் அமைச்சர்
மன்சூர் அன்று
மேற்கொண்டிருந்தார். இப் பேச்சுவார்த்தையின்
பயனாக 1993 ஆம் ஆண்டு ஈரான் நாட்டு
அரசாங்கத்தின் பொறியியல் நிபுணர்கள் அடங்கிய குழு
ஒன்று மட்டக்களப்பு
கல்முனை பிரதேசங்களுக்கு
வருகை தந்து
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான
ரயில் பாதை
விஸ்த்தரிப்பு செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்
பின்னர் இதற்குத்
தேவையான திட்ட
வரைவுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். ரயில் பாதை
ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி
மாற்றம் காரணமாக
இத்திட்டம் அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இதுவரையும்
இருந்து கொண்டிருக்கிறது.
இந்த
ரயில் பாதை
விஸ்த்தரிப்பு விடயமாக முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு
ஒரு கடிதம்
எழுதியதாகவும் இக்கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து
தங்களது கோரிக்கையின்
பிரகாரம் இது
தொடர்பில் புகையிரத
திணைக்களத்தின் பொது முகாமையாளரினால் கவனம் செலுத்தப்படும்
என பதில்
வந்ததாகவும் பின்னார் பொது முகாமையாளரோடு தொடர்பு
கொண்டபோது இதுபற்றி
எனக்கு எதுவும்
தெரியாது என்று
கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே
முன்னாள் அமைச்சர் தற்போது . புகையிரத
திணைக்களத்தின் பொது முகாமையாளரை நேரடியாச் சந்தித்துள்ளார்.
.
0 comments:
Post a Comment