சாய்ந்தமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசலுக்கு ஹக்கீம்
வழங்கிய பணம் ஒலிபெருக்கித் தொகுதிக்கான பணம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சாய்ந்தமருது
ஜும்ஆ பெரிய
பள்ளிவாசலின் நவீன ஒலிபெருக்கித் தொகுதி கொள்வனவுக்காக
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது
சொந்த நிதியில்
இருந்து 9 லட்சம்
ரூபாவை வழங்கியுள்ளார்.
இதனைக் கையளிக்கும்
பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா
தலைமையில் பள்ளிவாசல்
காரியாலய மண்டபத்தில்
இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில்
அமைச்சரின் சார்பில் அவரது இணைப்புச் செயலாளர்
ரஹ்மத் மன்சூர்
கலந்து கொண்டு
பள்ளிவாசல் தலைவரிடம் அப்பணத் தொகையை கையளித்தார்.
அமைச்சர்
ரவூப் ஹக்கீமின்
சொந்த நிதியிலிருந்து
இந்த தொகை
பள்ளிவாசல் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விடயம் ஊடகங்கள்
ஊடாக மிக,
மிக பகிரங்கப்படுத்தப்பட்டது
தொடர்பில் பல்வேறு
வாதப் பிரதிவாதங்கள்
எழுந்துள்ளன. பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த
விடயத்தை அமைச்சர்
ஹக்கீம் கூட
விரும்பியிருக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதில் உண்மை
இருக்கவே செய்யும்.
இதனைப் பற்றி
நான் அதிகம்
எழுதினால் என்னை
ஊர் பலாய்
என்கிறனர். எனக்கு விருப்பமான பல நண்பர்கள்
என்னை நாரதா…,
நாராணயா என்று
எல்லாம் கிண்டலடிக்கிறார்கள்.
நான் பாவம்..
மேலும்
சாய்ந்தமருது பள்ளிவாசலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரீஸ்
அதிக தொடர்புகளை
வைத்துள்ளவர். ஆனால், அவரிடம் அந்தப் பணத்தை
கொடுக்காமல் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரிடம்
ஹக்கீம் ஏன்தான்
கொடுத்து அனுப்பினாரோ
தெரியவில்லை. அந்த மக்களின் பிரதிநிதி என்ற
வகையில் ஹாரீஸிடம்
கொடுத்திருக்கலாம் அல்லவா?
ஆனால்
ஹாரீஸிடம் இந்தப்
பொறுப்பை ஹக்கீம்
ஒப்படைக்காமைக்கும் காரணம் இல்லாமலும்
இருக்க முடியாது.
ஹக்கீம் என்ன
சும்மா ஆளா?
இதனையப் பற்றி
நான் விபரித்தால்
என்னை நாரதா,
நாராணயா என்றெல்லாம்
அழைக்கிறார்கள். எதற்குத்தான் எனக்கு இந்தச் சோலிகள்?
வேண்டவே வேண்டாம்.
அப்பா.
சில
வேளைகளில் நிசாம்
காரியப்பரின் ஆலோசனையின் பேரில்தான் ரஹ்மத் மன்சூரிடம்
ஹக்கீம் கொடுத்தனுப்பினாரோ
தெரியாது. ஹாரீஸுக்கும்
நிசாமுக்கு பிடிக்காதுதானே? இந்த வீண் வம்புகள்
எனக்கு என்னத்துக்கு?
அமைச்சர்
ஹக்கீமும், ஹாரிஸ் எம்பியும் கொழும்பில் சிநேகபூர்மாகப்
பழகினாலும் இருவருக்குமிடையில் உள்மன ஆழத்தில் வெறுப்புகளும்
அதிருப்திகளும், ஒவ்வாமையும் உள்ளனதானே? அவ்வாறான நிலையில்
அமைச்சர் ஹக்கீம்
ஹாரீடம் இந்த
நன்கொடையை எவ்வாறுதான்
கையளிக்க முடியும்.
ஐயையோ
எனது வாயைக்
கட்டுப்படுத்தாமல் ஏதோவொல்லாம் உளறிவிட்டேன்.
ஆளை விடுங்கோ…
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.