உலகக் கிண்ணப் போட்டி
ஆஸ்திரேலியா
பாகிஸ்தானை வீழ்த்தி
அரையிறுதிக்கு
தகுதி பெற்றது
அடிலெய்டில்
உள்ள ஓவல்
மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக் கிண்ணக் காலிறுதி
ஆட்டத்தின் 3வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத்
தகுதி பெற்றுள்ளது.
214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் களமிறங்கி
விளையாடிய ஆஸ்திரேலிய
அணியின் தொடக்க
வீரர் பின்ச்
2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு 8வது ஓவரில்
வார்னர் 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த ஸ்மித்தும்
(65 ஓட்டங்கள்), வாட்சனும் (64 ஓட்டங்கள்) அரைச் சதத்தை
எட்டினர். கிளார்க்
8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மேக்ஸ்வெல்
(44) வாட்சனுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய
அணி, வீரர்களின்
சிறப்பான ஆட்டத்தால்
33.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு
216 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து
பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வீழ்த்திய ஆஸ்திரேலியா
அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
0 comments:
Post a Comment