கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இன்று தொடக்கம்
விசேட கொடுப்பனவு
பிரதேச வைத்தியசாலைகளில்
தம்மை பதிந்து கொள்வதற்கான
விண்ணப்பத்தை 20 ரூபா
செலுத்தி பெற்று கொள்ள முடியும்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான
விசேட கொடுப்பனவு இன்று தொடக்கம்
மாவட்ட ரீதியாக
வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் விவகார அமைச்சின்
பணிப்பாளர் சந்திமா சிசரா தெரிவித்துள்ளார்.
புதிய அரசினால் இடைக்கால
வரவு செலவு திட்டத்தில்
குறிப்பிடப்பட்ட கர்ப்பிணித்
தாய்மார்களுக்கான 20 ஆயிரம்
ரூபா கொடுப்பனவு தொகை இன்று
21 ஆம் திகதி தொடக்கம் அனைத்து
மாவட்ட ரீதியாக கொடுப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பணிப்பாளர்
மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்
இது
தொடர்பில் இடம்பெற்ற புதிய அரசின்
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களை
தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு
பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை
திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷ டி
சில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்து கொண்டு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
புதிய அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான 20 ஆயிரம்
ரூபா கொடுப்பனவு தொகையானது
21 ஆம் திகதி தொடக்கம் அனைத்து
பிரதேசங்களுக்கும் வழங்குவதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டில் பெரும்பாலும்
05 வயதிற்கு குறைந்த குழந்தைகள்
போஷாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான நிலைமைகள் இன்று அனைத்து
மாவட்டங்களிலும் நிலவுவதோடு மறுபுறம்
போஷாக்கின்மையால் பிறக்கும் குழந்தைகள்
பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டே
எமது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்
கர்ப்பிணித் தாய்மார்களின்
போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு
தவணை அடிப்படையில் 20ஆயிரம்
கொடுப்பனவுகளை வழங்குவதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட ரீதியாக
மேற்கொள்ளும் எமது குறித்த
செயற்திட்டத்தில் பயன்பெற விரும்பும்
அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும்
மாவட்ட வைத்தியசாலை மற்றும் பிரதேச
வைத்தியசாலைகளில் தம்மை பதிந்து
கொள்வதற்கான விண்ணப்பத்தை
20 ரூபா செலுத்தி பெற்று கொள்ள
முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment