உலகக் கிண்ணக் கிரிக்கெட்
இறுதி
போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதல்
அரையிறுதி ஆட்டத்தில்
நாணயற் சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கி
விளையாடிய தென்னாப்ரிக்கா
5 விக்கெட் இழப்புக்கு 43 ஓவர்களில்
281 ஓட்டங்களை எடுத்தது. மழை காரணமாக ஆட்டம் பாதியில்
பாதிக்கப்பட்டது. இதனால், ஓவர்கள் குறைக்கப்பட்டு 43 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 298 ஓட்டங்கள்
இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. .தென்னாப்ரிக்கா அணி சார்பில் பிளெஸிஸ் 82 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்தபடியாக டி வில்லியர்ஸ் 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல்
இருந்தார்.நியுசிலாந்து
சார்பில் ஆன்டர்சென்
3 விக்கெட்டுகளையும், பௌல்ட் 2 விக்கெட்டுகளையும்
கைப்பற்றினர்.
ஓவர்
குறைக்கப்பட்டதால், 43 ஓவர்களில் 298 ஓட்டங்கள்
எடுத்தால் வெற்றி
என்ற இலக்குடன்
களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட
42.5 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 292 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுக்கலால் வெற்றி பெற்றது. இந்த
வெற்றியின் மூலம் முதன்முறையாக இறுதி போட்டிக்குள்
நுழைந்தது நியூசிலாந்து
அணி. அணியில்
அதிகபட்சமாக எலியாட் 88 ஓட்டங்கள், மெக்கலம்
59 ஓட்டங்கள், ஆண்டர்சன் 58 ஓட்டங்களும் எடுத்தனர்.
0 comments:
Post a Comment