500 கிலோ தங்கத்தை உருக்கி உருவாக்கிய
உலகின் விலை உயர்ந்த லம்போர்கினி கார்
ஆடம்பரத்துக்கு
பெயர்போன டுபாய்
செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை
உருக்கி, ஒரு
லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, நகரும்
தங்க ரதமாக
அதை சாலையில்
ஓடவிட்டு பரவசம்
அடைந்துள்ளனர்.
வெளிப்புறத்தில்
தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள்,
உள் இருக்கை
மற்றும் மேற்கூரையில்
தங்க இழைகளில்
நவரத்தின கற்களின்
அழகிய வேலைப்பாட்டுடன்
கூடிய இந்த
காரின் கண்ணாடிகள்
அனைத்தும் குண்டுகளால்
துளைக்க இயலாதவை
என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
2013-ம் ஆண்டு
டுபாய் கார்
கண்காட்சியில் இடம்பெற்ற இந்த 'லம்போர்கினி அவெண்டாடர்
LP700-4.’ கார், வெறும் காட்சிப் பொருளாக மட்டுமின்றி,
V12 எஞ்சினுடன் மூன்றே வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை
எட்டிப்பிடிக்க வல்லது.
இதன் விலையாக 2 கோடியே 70
லட்சம் திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.https://youtu.be/ihUOvVyr1DQ
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.