தும்பிக்கையுடன் பிறந்துள்ள
பெண் குழந்தை
விநாயகரின் மறுபிறவி என்று காணச் செல்லும் மக்கள் கூட்டம்
(வீடியோ இணைப்பு)
இந்தியாவிலுள்ள
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரை சேர்ந்த
தம்பதிகள் ஓம்
பிரகாஷ்-சர்வேஷ்.
ஏற்கனவே இந்த
தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் 26 ஆம் திகதி
காலை
7 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் முகத்தில் யானைக்கு இருப்பது போன்று
தும்பிக்கை உள்ளது.
இதை
பார்த்த அக்கம்
பக்கத்து பகுதிகளில்
வசிக்கும் மக்கள்
குழந்தை விநாயக
கடவுளின் அவதாரம்
என எண்ணினர்.
இதை தொடர்ந்து
ஏராளமான மக்கள்
தினமும் சென்று
குழந்தையை பார்த்து வணங்கி செல்கின்றனராம்.
நாளுக்கு நாள்
குழந்தையை பார்க்க
வரும் கூட்டமும்
அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம்.
இதற்கிடையில்,
இந்த தும்பிக்கை
செய்திகள் தொடர்பாக
கருத்து தெரிவித்துள்ள
ஒரு டாக்டர், ‘இது ஒரு
உபரி சதை
வளர்ச்சி, குழந்தை
வளர்ந்த பின்னர்
அவளது பெற்றோர்
விரும்பினால் ஆபரேஷன் மூலம் அதை அகற்றி
விடலாம்’ என்று
தெரிவித்துள்ளார்.
https://youtu.be/2Db1o0_qxG0
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.