16 வருடங்களுக்குப்
பிறகு ஏற்பட்டிருக்கும்
அபூர்வமான சூரிய கிரகணம்
16
வருடங்களுக்குப் பிறகு அபூர்வமானதும் முழுமையானதுமான
சூரிய கிரகணம்
இலங்கை நேரப்படி
இன்று வெள்ளிக்கிழமை
பி.ப
மாலை 5.20 வரைக்கும்
தென்படவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தால் ஐரோப்பிய
நாடுகள் சில
இருளில் மூழ்கும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்;
இந்த சூரிய
கிரகணம் இலங்கையில்
தென்படாது என்பதுடன்
இலங்கையில் இதனது தாக்கமும் இருக்காது என்று
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'சுப்பர்
மூன்' என்ற
அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் இதற்கு
முன்னர் 1999ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனைத்
தொடர்ந்து இன்று
நிகழ்ந்துள்ள இந்த அபூர்வ கிரகணமானது லண்டன்,
நோர்வே உள்ளடங்கலாக
பல்வேறு ஐரோப்பிய
மற்றும் ஸ்கண்டினேவிய
நாடுகளிலும், பராயா தீவுகளிலும், ஆபிரிக்கா மற்றும்
ஆசியா கண்டத்தின்
சில நாடுகளிலும்
தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு
சூரிய கிரகணம்
இதற்குப் பிறகு
2026ஆம் ஆண்டிலேயே
ஏற்படும் என
விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment