யாழ்ப்பாணத்தில் இரு
மொழிகளிலும்
இசைக்கப்பட்ட
தேசியகீதம்
வளலாயில்
நடைபெற்ற பொதுமக்களுக்கான காணிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு
மொழிகளிலும் தேசிய கீதம் ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டது.
வளலாய்,
வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வளலாய் பகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ் மற்றும்
சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது.
தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பில் அரசில் இணக்கப்பாடு
காணப்பட்டுள்ள போதும், சிலர் அதனை ஏற்க மறுத்து வந்தனர்.
ஆனால்
அதற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை
தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது
சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று நிறைவேற்று சபை உறுப்பினரும்,
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம், கடந்த 17ஆம் திகதி உறுதியளித்திருந்தார்.
இந்த
நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதியை இன்று முதலில் யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment