புதிய தேசிய அரசாங்கத்தின்
அமைச்சரவையில்
இன்னும் சிலருக்கு
அமைச்சுப்பதவிகள்?
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின்
அமைச்சரவையில் இன்னும் சிலருக்கு அமைச்சு, பிரதி மற்றும்
இராஜங்க அமைச்சுப்பதவிகள் இன்று அல்லது நாளை வழங்கப்படலாம் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.
ஸ்ரீ
லங்கா சுதந்திரக்கட்சி
உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள்
மற்றும் இராஜாங்க
அமைச்சுகளுக்கு மேலதிகமாக மேலும் சில அமைச்சுக்கள்,
பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க
அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல்கள்
மேலும் தெரிவிக்கின்றன.
100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும்
அரசியலமைப்பு திருத்தம், அரசியலமைப்பின் புதிய திருத்தத்தை
அமுல்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்;கட்சி உறுப்பினர்கள்
11 பேர் அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் , 5 பேர் பிரதி அமைச்சர்களாகவும் 10 பேர் இராஜாங்க
அமைச்சர்களாகவும்நியமிக்கப்பட்டனர்.
ஏற்கனவே
45 அமைச்சர்களை மட்டுமே கொண்டிருந்த
ஜனாதிபதி மைத்திரி
பால சிறிசேன
தலைமையிலான அரசில் 26 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு
தற்போது மொத்தமாக 71 அமைச்சர்களைக் கொண்டதாகப்
புதிய தேசிய
அரசாக மாற்றமடைந்துள்ள நிலையில் இதற்கு
மேலதிகமாக இன்னும்
சிலருக்கு அமைச்சு,
பிரதி மற்றும்
இராஜங்க அமைச்சுப்பதவிகள்
இன்று அல்லது
நாளை வழங்கப்படலாம்
என்றும் அந்த
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment