உலகை உலுக்கியுள்ள சிறுமியின் புகைப்படம்
சிரியாவில்
புகைப்படம் எடுப்பதற்காக குறிபார்த்த கமராவை
துப்பாக்கி எனக் கருதிய சிறுமி ஒருத்தி தனது கைகள் இரண்டையும் தலைக்கு
மேலே தூக்கி
சரணடையும் பாணியில்
நிற்கும் புகைப்படம்
அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும்
தோலுரித்துக் காட்டியுள்ளது.
உள்நாட்டுப்
போரினால் சிரியா
மிக மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை
மொத்த உலகமும்
கைவிட்டு விட்டதாக
ஐ.நா.
பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை
தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்,
இங்குள்ள மக்களின்
வாழ்க்கை நிலை
எப்படி உள்ளது?
என்பது தொடர்பாக
செய்தி சேகரிக்க
காசாவை சேர்ந்த
புகைப்பட நிருபரான
நாடியா அபு
ஷபான் என்பவர்
சிரியாவில் உள்ள ஒரு நகரத்துக்கு சென்றிருந்தார்.
அங்கு குண்டு
வீச்சில் நாசம்
அடைந்த ஒரு பகுதிக்கு சென்ற
அவர், ஒரு
தெருவில் தனியாக
சோகத்துடன் நின்றிருந்த சுமார் 4 வயது சிறுமியை
தனது கமராவால்
படம் பிடிக்க
நினைத்தார்.
அதற்கான
கோணத்தை தயார்
செய்து, சிறுமியை
கமரா லென்சால்
குறிபார்த்தார். துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்டவர்கள்
எதிரியிடம் சரணடையும் பாணியில் கைகள் இரண்டையும்
தனது தலைக்கு
மேலே உயர்த்திய
அந்த சிறுமி
திகிலில் அழும்
நிலைக்கு சென்று
விட்டாள். நெஞ்சை
பிழியும் இந்த
புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
நாடியா அபு
ஷபான், சிரியாவில்
குழந்தைகளின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது?
என்பதை விளக்க
இந்த புகைப்படமே
உதாரணம் என்றும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment