உலகக் கிண்ண அரையிறுதி போட்டி
இறுதிப்
போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து
அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி
எதிர்வரும்
29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பர்னில்
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 2வது
அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழத்தி
ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
முன்னதாக
நாணயச் சுழற்சியில் வென்று துப்பாட்டத்தை தெரிவு
செய்த ஆஸ்திரேலிய
அணி 50 ஓவர்களில்
328 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் ஸ்டீவ்
ஸ்மித் 105(93) ஓட்டங்கள்
குவித்தார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ்
4 விக்கெட்டை வீழத்தினார். இதனையடுத்து
329 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின
இலக்குடன் களம் இறங்கிய
இந்திய அணியின்
தொடக்க வீரர்கள்
சிறந்த தொடக்கத்தை
கொடுத்தனர்.
தவான்
45(41) ரோகித் சர்மா 34(48) ஓட்டங்களும் குவித்தனர். பின்னர்
களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்
கோலி 1 ஓட்டத்தில்
ஆட்டமிழந்தது இந்தியாவிற்கு பின்னடைவை
தந்தது. இதனையடுத்து
வந்த டோணி,
ரஹானே பொறுமையாக
விளையாடி வந்தனர்.
ரஹானே 44(68) ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை
சந்திக்க வேண்டிய
நிலை ஏற்பட்டது.
மறுமுனையில் கெப்டன்
டோணி 65(65)ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய தோல்வியின்
பக்கம் சாய்ந்தது.
இறுதியில்
இந்திய அணி
46.5 ஓவர்களில் 233 ஓட்டங்கள் எடுத்து
தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பர்னில்
நடக்க உள்ளது.
0 comments:
Post a Comment