இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த
மூன்றாம் ரிச்சர்ட் மன்னரின் உடல் நேற்று அடக்கம்

இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரின் உடல் நேற்று 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தான் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளான்டஜெனட் என்ற ஒரு பிரிவினர் அங்கு லீசெஸ்டர் என்ற பகுதியை 1154 முதல் 1485 வரை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த மூன்றாம் ரிச்சர்ட், 1485 ல் நடந்த ஒரு போரில் இறந்துவி்ட்டார். அவரது உடலை அப்போது உள்ளவர்கள், ஒரு சவப்பெட்டிக்குள் வைத்திருக்காமல்,ஒரு மரியாதையும் செய்யாமல் அப்படியே எங்கோ புதைத்திருக்கிறார்கள்.

2012-ல் ஒரு புதைபொருள் ஆராட்சியாளர், தற்செயலாக இவரது எலும்புகளை, கார்பார்க்கிங் ஒன்றின் அடியில் கண்டுபிடித்து எடுத்து லீசெஸ்டன் பல்கலைக்கழகத்தில் கொடுத்து இது மூன்றாம் ரிச்சர்ட் இன் எலும்புகள் தானா என்று கண்டுபிடிக்க வைத்திருக்கிறார். பல இரசாயன பரிசோதனைகளுக்கு பின் இது அவரது உடல் பாகங்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, ஒரு மன்னருக்கு உள்ள மரியாதையுடன் நேற்று லீசெஸ்டரில் அடக்கம் செய்யப்பட்டது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top