விரால் மீன் வாங்கும் இடத்திலும்
சம்மாந்துறை
மக்களின் நீதி,நேர்மை
ஒரு நேரடி அனுபவம்
விரால் மீனை சம்மாந்துறை மார்க்கட்டில்
கடந்த
16 ஆம் (2015.03.16)
திகதி திங்கள்
கிழமை வாங்கும்போது
அந்த ஊர் மக்களின்
நீதியான நடவடிக்கை
ஒன்று
எனது ( மக்கள் விருப்பம் ) விடயத்தில் இடம்பெற்றது. உண்மையாகவே சம்மாந்துறை
மக்களின் நீதியான
நடவடிக்கை குறித்து
அதனை இங்கு
பதிவு செய்ய
விரும்புகின்றேன்.
குிறித்த
தினத்தில் சம்மாந்துறையில்
எனது அலுவல் ஒன்றை முடித்துவிட்டு கொழும்பில் பல மாதங்கள் இருந்த நான் ஆற்று மீன் சாப்பிட
வேண்டும் என்ற ஆசையில் சம்மாந்துறை மீன்
சந்தைக்கு காலை
10.00 மணிபோல் விரால் மீன் வாங்குவோம் என்று
சென்றிருந்தேன்.
விரால்
மீன்களை வைத்துக்
கொண்டு விற்பவரைச்
சுற்றி பலர்
நின்றிருந்தனர். அம்மீனுக்குள் ஒரு பெரிய மீனைக்காட்டி
இந்த மீனுக்கு
எவ்வளவு என்று
கேட்டேன். மீன்
சொந்தக்காரரோ 1000/- ஆயிரம் ரூபா
என்றார். சரி
ஒரு கிலோ
விரால் மீன்
எவ்வளவு என்று
கேட்டேன் 600/- அறுநூறு ரூபா என்றார். சரி
அந்த மீனை
நிறுங்கள் பார்ப்போம்
என்றேன். ஒரு
கிலோ எடை
இருந்தது. அப்படியானால்
அந்த விரால்
மீனின் விலை
என்ன என்று
கேட்டேன் 600/- என்றார்.இந்த சந்தர்ப்பத்தில் எனக்குப்
பின்னால் நின்ற
ஒருவர் அவர்
சம்மாந்துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
அவர் அந்த மீனை எனக்குத் தாருங்கள்
என்றார். உடனடியாக
மீன்காரர் அவசரமாக
ரைட் அந்த
விரால் மீனை
அவருக்கு கொடுங்கள்
என்று தனது
உதவியாளரிடம் சொன்னார். அப்பொழுது நான் விரால்
மீன் விற்பவரைப்
பார்த்து
அந்த மீனை வாங்குவதற்கு முதலாவதாக விலை
கேட்டவன் யார்? அந்த மீனை நீங்கள்
எடுக்கப் போகின்றீர்களா?
இல்லையா? என்று
என்னிடம் ஒரு
வார்த்தை கேட்காமல்
எப்படி மற்றவருக்கு
கொடுக்கப்போகின்றீர்கள்? என்று கேட்டேன்.
உடனே விரால்
மீன்கள் விற்கும்
இடத்தில் கூடியிருந்த
மக்கள் ஒருமித்தவர்களாக
என்னை இவர்
எந்த ஊர்? சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவரா
என்று பார்க்காமல்
மீனை முதலில்
கேட்ட அவருக்கே
கொடுங்கள் என்று
சப்தமிட்டு அவ்விடத்தில் நீதியாகச் செயல்பட்டார்கள். இது சம்மாந்துறை மக்களின்
நீதி நேர்மைக்கு
ஒரு எடுத்துக்காட்டாக
இருந்தது. உண்மையாகவே
சந்தோஷப்பட்டு அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். அந்த மக்களின் நீதி நேர்மையை
மக்கள் விருப்பம்
பாராட்டுகின்றது. இப்படி இந்த மக்களின் நேர்மையைப்
போன்று ஏனைய ஊர்காரர்களும் செயல்பட வேண்டும்
என்பதற்காகவும் அந்த ஊர் மக்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் இதனை மக்கள் விருப்பம்
பதிவேற்றியுள்ளது.
0 comments:
Post a Comment