இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக முன்னேறுவது
யார்?
தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 55/2
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்று
நடைபெறும் முதலாவது
அரை இறுதி
ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள்
பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் முதலாவது
அரை இறுதி
ஆட்டம் நியூசிலாந்தின்
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில்
இன்று (செவ்வாய்க்கிழமை)
இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஆரம்பமானது..
இதில் நாணயச்
சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை
தெரிவு செய்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
தென்
ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை
இழந்து 55 ஓட்டங்களை பெற்றுள்ளது.
11-வது
உலக கோப்பை
கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை
நெருங்கி இருக்கிறது.
எல்லோரும் எதிர்பார்த்தபடி
நடப்பு சாம்பியன்
இந்தியா, போட்டியை
நடத்தும் ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள்
அரை இறுதிக்கு
முன்னேறின.
இதில்
உள்ளூர் அணியான
நியூசிலாந்தை, தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.
இரு அணிகளும்
சமபலத்துடன் விளங்குவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்
ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடையே இரண்டு
ஒற்றுமைகள் உள்ளன. இரு அணிகளுமே கிண்ணத்தை
வென்றது கிடையாது. அத்துடன் இரு
அணிகளுக்கும் இதுவரை இறுதிப்போட்டி எட்டாக் கனியாகவே
இருந்து வருகிறது.
நியூசிலாந்து
அணி 7-வது
முறையாக அரை
இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
1975, 1979, 1992, 1999, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் அரை
இறுதியுடன் நியூசிலாந்து அணியின் கிண்ணக் கனவு கலைந்து
இருக்கிறது.
23 ஆண்டுகளுக்கு
பிறகு சொந்தமண்ணில்
நடைபெறும் அரை
இறுதியில் வெற்றி
பெற்று முதல்
முறையாக இறுதிப்போட்டிக்கு
முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது.
தென்
ஆப்பிரிக்க அணி 4-வது முறையாக அரை
இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. 1992,
1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியில் தென்
ஆப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது.
நாக்-அவுட்
சுற்றில் எப்பொழுதும்
கோட்டை விடும்
தென் ஆப்பிரிக்க
அணி இந்த
முறை முதல்
தடவையாக கால்
இறுதியில் (நாக்-அவுட்) இலங்கையை வீழ்த்தி
வியக்க வைத்தது.
நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா
அணிகள் இதுவரை
61 ஒருநாள் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில்
நியூசிலாந்து அணி 20 முறையும், தென் ஆப்பிரிக்கா
அணி 36 முறையும்
வெற்றி பெற்று
இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.
உலகக் கிண்ணப் போட்டியில் இரு அணிகளும் 6 முறை
நேருக்கு நேர்
சந்தித்து இருக்கின்றன.
இதில் நியூசிலாந்து
அணி 4 முறையும்,
தென் ஆப்பிரிக்க
அணி 2 தடவையும்
வென்று இருக்கின்றன.
0 comments:
Post a Comment