இலங்கைக்கு வருகை தந்ததை
எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்
இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடி
இலங்கைக்கு
வருகை தந்ததை
எண்ணி மிக்க
மகிழ்ச்சி அடைகிறேன்
என்று இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று ஜனாதிபதி,மைத்ரிபால சிறிசேனவும்
இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடியும் கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது
இந்தியப் பிரதமர் மோடி பேசியதாவது,
1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர்
இலங்கைக்கு வந்திருப்பது ஒரு வரலாற்றுப் பயணம்.
இரு நாடுகளுக்கும்
இடையே உள்ள
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், உறவை பலப்படுத்தவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
உறவை
வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் அடிக்கடி
சந்தித்துக் கொள்வது அவசியம். டில்லியில் இருந்து
கொழும்புக்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும்.
வரலாறு
மற்றும் மத
ரீதியாக இந்தியா
- இலங்கை நாடுகள்
நெருங்கிய தொடர்பு
கொண்டவை.
இலங்கை
பயணிகள் இந்தியா
வந்ததும் விசா
வழங்கும் முறை
ஏப்ரல் 14 ஆம்
திகதி முதல்
அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment