சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ உடல்
மார்ச் 29 ஆம் திகதி நல்லடக்கம்
சிங்கப்பூரின்
தந்தை என்றழைக்கப்படும்
லீ குவான்
யூ ( வயது
91 ) வின் உடல் மார்ச் 29 ஆம்
திகதி அரசு
மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று
முதல் மார்ச்
28 ஆம் திகதி
வரை அவரது
உடல் பொதுமக்களின்
அஞ்சலிக்காக சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட
உள்ளது.
நிமோனியாவால்
பாதிக்கப்பட்டிருந்த லீ மருத்துவ
சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர்
உயிர் பிரிந்தது.
லீ
குவான் யூ,
31 ஆண்டுகள் பிரதமராக இருந்து சிங்கப்பூரின் மாபெரும்
வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவையடுத்து சிங்ப்பூரில் ஒரு
வாரம் துக்கம்
அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
லீ
குவான் மறைவிற்கு
ஐ.நா.,
பொதுச்செயலாளர் பான் கீ-மூன், அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment