முஹம்மது நபி (ஸல்
) அவர்கள் குறித்த
ஈரான் திரைப்படத்தால் சர்ச்சை
முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் இளம்பிராயம் குறித்த ஈரானியத்
திரைப்படம் ஒன்று சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின்
புனித வேத நூலான
குர்ஆனில் இடம்
பெற்றுள்ள முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் இளம்பிராய வாழ்க்கை
வரலாறு, "முஹம்மது: இறைவனின் தூதர்' என்ற
தலைப்பில் ஈரானில்
திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த
நாட்டின் அல்லாயர்
என்ற கிராமத்தில்,
ஏராளமான பொருள்
செலவில் புனித
மக்கா நகரைப் போலவே "செட்'
அமைத்து இந்தப்
படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவம்
காண்பிக்கப்படாமல், பிற கதாப்பாத்திரங்களின்
மூலம் அவரது
வரலாறு விளக்கப்படுகிறது.
எனினும்,
திரைப்படத்தில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
பின்புறமாக காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், முஸ்லிம்களின்
ஒரு பிரிவினரிடையே
இந்தத் திரைப்படத்துக்கு
எதிர்ப்பு எழுந்துள்ளது.
முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் புற வடிவத்தை படமாக வெளியிடுவதற்கு
பெரும்பாலான மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
"முஹம்மது: இறைவனின் தூதர்' படத்துக்கு
உலகின் பிற
பகுதிகளிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், அந்த நாட்டிலேயே
மிகப் பெரும்
பொருள் செலவில்
எடுக்கப்பட்ட அந்தப் படம் வெளியிடப்படுவது தற்போது கேள்விக் குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப்
படத்துக்கு ஏ.ஆர். ரஹுமான் இசையமைத்துள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment