சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ 

காலமானார்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
1965-ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை யடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார். 1990ம் ஆண்டு வரை பதவியில் தொடர்ந்தார்.

கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இவரது மறைவையடுத்து சிங்ப்பூரில் ஒரு வாரம் துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

லீ குவான் மறைவிற்கு .நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லீ குவானை மாபெரும் வரலாற்று தலைவர் என கூறியுள்ளார்.
























Mr Lee speaks during a rally at Farrer park in Singapore on 15 August 1955


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top