ஏமன் நாட்டில் மசூதிகளில் தற்கொலை படை தாக்குதல்
137 பேர் பலி 350 பேர் படுகாயம்
அரபு
நாடான ஏமனில்
அதிகாரப்போட்டி காரணமாக, நீண்ட காலமாக உள்நாட்டுப்
போர் நடந்து
வருகிறது. அங்கு
தலைநகர் சனாவை
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
சமீபத்தில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில்
அங்கு ஷியா
பிரிவு முஸ்லிம்களும்,
ஹவுதி கிளர்ச்சியாளர்களும்
அடிக்கடி வந்து
தொழுகை நடத்திச்செல்கிற
அல் பாதிர்,
அல் ஹாஸ்ஹ¨ஸ் மசூதிகளில் தற்கொலை
படை தீவிரவாதிகள்
உடலில் வெடிகுண்டுகள்
கட்டப்பட்ட பெல்ட்டுகளை அணிந்து வந்து அவற்றை
வெடிக்கச்செய்தனர்.
இதன்காரணமாக
பலத்த சத்தத்துடன்
குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதல்களில்
137 பேர் உடல்
சிதறி பலியாகி
விட்டதாக தற்போதய தகவல்கள்
கூறுகின்றன. 350க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூர
தாக்குதல்களுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு
ஏற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாத
அமைப்பின் ஆதரவாளர்கள்
சிலர் தாங்கள்தான்
தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக கூறி உள்ளனர்.படுகாயம்
அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில்
சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது
நிலைமை கவலைக்கிடம்
அளிப்பதாக உள்ளதால்
பலி எண்ணிக்கை
மேலும் உயரும்
எனக் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment