இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை
ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்
-
தூய்மையான ஹெல உறுமயவின் தலைவர் உதயன் கம்மன்பில
இலங்கையின்
தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவது
குறித்து சட்டபூர்வமாக நாடுமுழுவதும் அமுலாகும்
விதத்தில் நடடிவக்கை
எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருப்பது
புதிய அரசின்
100 நாள் வேலைத்திட்டத்தில்
உள்ளடக்கப்படக்கூடாது என்று தூய்மையான
ஹெல உறுமயவின்
தலைவரும் மேல்மாகாண
சபை உறுப்பினருமான
உதயன் கம்மன்பில.தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 17ஆம் திகதி உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தேசிய நிகழ்வுகளில் ஒருபோதும் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment