இன்று உலக சிட்டுக்குருவிகள்
தினம்
உலகம்
முழுவதும் இன்று சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. காலப்போக்கில்
வேகமாக அழிந்து
வரும் உயிரினமான
சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே
இவ்வாறு உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. விளைநிலங்களில் இரசாயன
கலவையிலான பூச்சிக்
கொல்லி மருந்துகள்
அடித்து வளரும்
தானியங்களை சாப்பிடும் சிட்டுக் குருவிகள் பரிதாபகரமாக இறந்து
விடுகின்றன.
சுமார்
40 அல்லது 50 வருடங்களுக்கு முன் எமது வயல் பிரதேசங்களில் சிட்டுக் குருவிகள் கூட்டம்
கூட்டமாகப் பறந்து வருவதைக் காணமுடியும். ஏன் எமது பிரதான விதிகளில் உள்ள மின் கம்பிகளில்
வரிசையாக அவைகள் அமர்ந்திருந்துப்பதையும் கூடு கட்டியிருப்பதையும் கண்டிருக்கின்றோம்.
பூச்சிக்கொல்லிளால்
பாதிக்கப்படும் சிட்டுக்குருவிகளால் இனப்பெருக்கம்
செய்ய முடிவதில்லை.
அவை இடும்
முட்டைகள் உடனே
உடைந்து விடுகின்றன.
கிராமப்புறங்கள்
நகரமயமாதல், மரங்கள் அழிப்பு, ஒலி
மாசு, செல்போன் டவர்களில்
இருந்து வெளியாகும்
கதிர்வீச்சு உள்ளிட்ட காரணங்களால் சிட்டுக் குருவிகளின்
வாழ்விடங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இதனால்,
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை தற்காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது.
0 comments:
Post a Comment