பாடசாலை சூழலில் இருந்து
தூயதேசத்தை கட்டி
எழுப்புவோம்.
-முஹம்மது காமில்-
பாடசாலை
சூழலில் இருந்து தூயதேசத்தை கட்டி எழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கல்முனை மனிதவள
அபிவிருத்திக்கான அமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வின் முதல் படிமுறையாக அவ்வமைப்பின்
தலைவர் சகோதரர் S. அப்துல்சமத் மற்றும் செயலாளர் சகோதரர் S.L.M.இப்ராஹீம் அவர்களின்
வழிகாட்டுதலோடும் ஏனைய அவ்வமைப்பின் உயர்மட்ட நிருவாக குழுவினரின் பங்குபற்றுதலோடும்
மேற்ப்படி சிரமதான நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) அன்று கல்முனைகுடி அல்சுஹரா
வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது.
மேற்படி
இவ் சிரமதான நிகழ்வில் இப்பாடசாலையின் அதிபர் முகம்மது கமால் கலந்து சிறப்பித்ததோடு
எதிர்காலத்தில் இப் பாடசாலையின் அபிவிருத்தி திட்டங்களிலும் மாணவர்களின் கல்விசார்
மற்றும் புறகீர்த்தி செயர்ப்படுகளிலும் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பினரின்
ஒத்துழைப்பையும் அனுசரனையையும் வழங்கி இப்பிரதேச மாணவர்களின் எதிர்காலத்து உதவுமாறும்
வேண்டிக்கொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.