அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தலைமையகதிற்குள்

பெண் வேடத்தில் நுழையமுயன்ற மர்ம நபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள போர்ட் மேடெவில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மையத்தின் தலைமையகம் உள்ளது. பலத்த பாதுகாப்பு பகுதியாக இது கருதப்படுகிறது நேற்று இரண்டு மர்ம நபர்கள் அதற்குள் நுழைய முயனறனர் இதை தொடர்ந்து  பாதுகாப்பு  அதிகாரிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானர். 20 வயதை எட்டிய மற்றொரு நபர், குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் இருவரும், பெண்கள் அணியும் உடையணிந்து, திருடப்பட்ட போர்டு எஸ்கேப் எஸ்.யூ.வி. கார் மூலம் வந்துள்ளனர்.
எதற்காக அந்நபர்கள் பெண்கள் போல் உடையணிந்து வந்தார்கள் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தாக்குதல் பற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இது உள்ளூர் குற்ற வழக்கு. இதை தீவிரவாத சம்பவமாக பார்க்கக்கூடாது" என கூறியுள்ளனர். இருவரும் வந்த வாகனத்தில் இருந்து, ஏராளமான போதை பொருட்களும், ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top