அபிவிருத்தியிலும் அனர்த்தத்திலும் கைகோர்ப்பதற்கான
பலம் எம்மிரு நாடுகளுக்கும் இருக்கவேண்டும்.

-    இலங்கை நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மோடி உரை




அபிவிருத்தியிலும் அனர்த்தத்திலும் கைகோர்ப்பதற்கான பலம் எம்மிருநாடுகளுக்கும் இருக்கவேண்டும். எங்களுடைய பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் அழுத்தம் கொடுக்கும் காரணங்களை கண்டறியவேண்டும். அதேபோல பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைமையை உருவாக்குவதற்கு நாம் இடமளிக்ககூடாது. இலங்கை, மாலைதீவு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன், சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்ற பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றாகும். அந்த பாடலில் மேற்குறிப்பிட வரிகளில் கூறப்பட்டுள்ளதை நான் பலப்படுத்துவேன்
எவ்வகையில் பார்த்தாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஒத்துமைகள் இருக்கின்றன. அண்மையில் இருக்கின்ற நாடு என்றவகையில் மதம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கின்றது. ஒரே காலத்தில் போலவே இருநாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது.
இந்தியப்  பெருங்கடலில் இலங்கையில் அபிவிருத்தி, இந்தியாவை பெருமைகொள்ள செய்துள்ளது.
வேளாண்மை, கல்வி, தொழில்நுட்பத்துறையில் இந்தியா, இலங்கைக்கு இடையே ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. மக்களுக்கு இடையிலான உறவு வலுப்படும் போது நாடுகளுக்கு இடையிலான உறவும் பலப்படும் இரு நாடுகளுக்கு இடையே சமயம், கலாச்சார பரிமாற்றத்துக்கு அதிக வாய்ப்புள்ளது
அனைத்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது அரசுகளின் கடமை. அண்மையில் இலங்கையில் நடந்த தேர்தல் ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தை பிரபலித்துள்ளது  ஒருமைப்பாடு, அமைதி, சமாதானத்தை மக்கள் விரும்புவதை தேர்தல் முடிவு காட்டுகிறது
உலகின் பொருளாதாரங்களில் அதிவேகமாக வளர்ந்து வருவது இந்திய பொருளாதாரம் தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதில் இந்தியா - இலங்கை முக்கிய பங்காற்ற வேண்டும்
உலக பொருளாதாரத்தில் பிரதான பங்குதாரராக இந்தியாவை உலகமே பார்த்தது. அந்த பெறுபேற்றின் பங்காளராக இலங்கையையும் சேர்ப்பதற்கே இந்தியா முயற்சித்தது. தெற்காசியாவின் அபிவிருத்தியில் பிரதான இயந்திரமாக இலங்கையும் இந்தியாவும் இருக்கவேண்டும்.
புத்தர் ஞானம் பெற்ற இடமே நான் பிறந்த மண்ணாகும். எங்களுடைய இருநாடுகளின் பாதுகாப்பு எமது இருப்புக்கு அத்தியாவசியமானது. சமுத்திர பாதுகாப்பு அதில் முக்கியமானதாகும்.
சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பளிப்பது எங்களுடைய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top