மஹிந்தவின்
யாழ்ப்பாண மாளிகை
ஆறு நட்டசத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு உத்தேசம்
( படங்கள்
இணைப்பு )
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ
யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில்
கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச
மாநாட்டு மத்திய
நிலையம் போன்ற
அரச மாளிகையைப்
பார்த்து அதிர்ந்துபோனதாகத்
தெரிவித்த பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க.,
அந்த மாளிகையை
6 நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்போவதாகவும்
தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
கோட்டை ரயில்
நிலையத்தில் நேற்று இலவச wi-fi சேவை பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. திட்டத்தை
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே
பிரதமர் மேற்கண்டவாறு
பிரதமர் தெரிவித்தார்.
இது
தொடர்பில் அவர்
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில்
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ அரச மாளிகையொன்றைக் கட்டியுள்ளார்.
200 ஏக்கர் நிலப்பரப்பில், கோடிக்கணக்கான
ரூபா செலவில்
இந்த மாளிகை
கட்டப்பட்டுள்ளது. அந்த
மாளிகையில் 10 அறைகளும், இரண்டு சாப்பாட்டு அறைகளும்,
ஒரு சமையலறையும்
உள்ளன. சமையறையிலிருந்து
சாப்பாட்டு அறைக்கு அரை மைல் தூரம்
உள்ளது. அப்போது
எங்கே சுடச்சுட
சாப்பிடுவது?
ஜனாதிபதிக்கென
பெரிய அறையொன்று
உள்ளது. அந்த
அறையில் ரயில்
நிலையத்தையே அமைத்துவிடலாம். அவரது மனைவிக்கு அதேபோல்
பெரிய அறையொன்று
உள்ளது. ஜனாதிபதிக்கென
மேலும் 4 சுகபோக
அறைகளும் உள்ளன.
அவருக்கென தனியான
நீச்சல் தடாகம்
ஒன்றும் உள்ளது.
நான் உலகில்
பல ஹோட்டல்களுக்குப்
போயிருக்கின்றேன். இந்த மாளிகையை
வாய்திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
பேசுவதற்கு ஒரு வார்த்தைகூட
வரவில்லை. கோடிக்கணக்கான
ரூபா செலவழித்து
அங்கு மாளிகை
அமைப்பதைவிட,, இளைஞர்களுக்கு, இலவசமாக சேவையையாவது வழங்கியிருக்கலாம்.
இது கிட்டத்தட்ட
ஒரு சர்வதேச
மாநாட்டு மத்திய
நிலையம்போல உள்ளது. காங்கேசன்துறைக்கு ஏன் சர்வதேச
மாநாட்டு மத்திய
நிலையம் என்று
நான் கேட்கிறேன்.
ஜனாதிபதியுடன் பேசி இதை 6 நட்சத்திர ஹோட்டலாக்க
நடவடிக்கை எடுக்கவுள்ளேன்
சிங்கள
மக்கள் வாழும்
பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அவர்கள்
எம்மை நாட்டிலிருந்து
விரட்டியிருப்பார்கள். ஆனால்
யாழில் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ
200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச
மாளிகை அமைத்தபோதும்
தமிழ் மக்கள்
இன்றுவரை பொறுமையாக
இருந்ததே பெரிய
விடயம்
தமது வீடுகளைக் கேட்டுப்
போராடும் தமிழ்
மக்கள் மீது
நாம் குற்றம்கூறமுடியுமா? மஹிந்த
அரசின் மோசடிகள்
பல உள்ளன.
இது தொடர்பில்
நாம் விசாரணைசெய்து
வருகின்றோம். இலங்கை மத்திய வங்கி, நிதி
அமைச்சு, திறைசேரி,
கணக்காய்வாளர் திணைக்களம் என்பன தமது கடமைகளை
நிறைவேற்றவில்லை. இவை தொடர்பில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன. நாம் இந்த ஊழல்,
மோசடி குறித்து
விசாரணை நடத்திவருகின்ற
நிலையில், நாம்
குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றோம் என்று கூறுகின்றனர். இடம்பெற்றுள்ள
மோசடிகளைக் கண்டுபிடிக்க நாம் மேற்கொள்ளும் விசாரணைகள்
குறித்து எவரும்
பேசுவதில்லை. நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதனால், இந்த
வேலைகளை நாடாளுமன்றம்தான்
செய்யவேண்டும். இதேவேளை, மஹிந்த அரசு யாழில்
200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான
செலவில் அரச
மாளிகையொன்றை அமைத்துள்ளது. இதுபோன்ற அரச
மாளிகையை எமது
மக்கள் வாழும்
இடங்களில் அமைக்க
முடியாது. அப்படிச்
செய்தால் சிங்கள
மக்கள் எம்மை
நாட்டைவிட்டு விரட்டியிருப்பார்கள். தமிழ்
மக்கள் இன்றுவரை
பொறுமையாக இருந்தது
பெரிய விடயமாகும் என்றார்.
0 comments:
Post a Comment